Oberster Priester
Siva Sri Arumugam Paskarakurukkal
Kontakt
E-Mail: info@hinduistische-gemeinde-deutschland.de
Öffnungszeiten/திறக்கும் நேரம்/opening times
8:00 | 12:00 | 18:00
அம்பிகை அடியார்களே!
ஹிந்து சங்கரர் சிறி காமாட்சி அம்பாள் ஆலயம் மத்திய ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் அமைந்துள்ள மிகப் பெரிய இந்து ஆலயமாகும். இவ் ஆலயமானது ஆலயப் பணிகளுடன் பல பொதுப்பணிகளையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்து வருகிறது.
அந்த வரிசையில் எமது பாரம்பரிய கலை பண்பாட்டு காலாச்சார விழுமியங்களை எதிர்காலச் சந்ததியினரின் கலாச்சாரப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறி காமாட்சி அம்பாள் ஆலயமானது மிகப் பெரிய கலாச்சார மண்டபம் ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளது. அதில் நூலகம், அருங்காட்சியகம் (எமது மூதாதையர்கள் பாவித்த பொருடகள் மற்றும் பல பழமை வாய்ந்த அரும் பொருட்கள்), இந்து மாநாடு போன்ற சத்சங்கம் நடைபெறுவதற்கான மண்டபம், யோகாப் பயிற்சியகம், பரதம்,சங்கீதம், வாத்தியங்கள் போன்ற கலைகளைக் கற்றுக் கொடுப்பதற்கான பாடசாலை, மற்றும் பல கலை அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த கலாசார மையம் அமையவுள்ளது.
இந்தப் பணியின் முதற்கட்டமாக கலாச்சார மையம் அமைப்பதற்கான காணியை பக்தர்களின் ஆதரவுடனும் வங்கிக் கடனுதவி மூலமாகவும் வாங்கியுள்ளோம். இருப்பினும் கட்டிடம் அமைப்பதற்கான பணியில் ஈடுபட தற்போது நிலமை உருவாகியுள்ளது வங்கியில் மீண்டும் கடனுதவி பெற்று. வங்கியில் கடனுதவியால் கட்டிடப் பணியை ஆரம்பிக்கபட்டு வருகிறது.
எனவே அன்னை அடியவர்கள் அனைவரும் இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் எமது கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதற்கு இக் கலாச்சார மையம் அமைய வேண்டியதன் முக்கியத்தை உணர்ந்து உங்களால் முடிந்த நிதியுதவியைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இத் திருப்பணிக்கு நீங்கள் உதவக் கூடிய வழிகள்
1. நீங்கள் விரும்பிய தொகையை நன்கொடையாகச் செலுத்தலாம் (மீள்வரி ரசீது வழங்கப்படும்)
2. வட்டியற்ற கடனுதவி செய்யலாம் (5வருடங்களில் திருப்பி செலுத்தப்படும்)
நீங்கள் நன்கொடை செய்ய விரும்புகிறீர்களா? மேலதிக விபரம் வேண்டுமா?
நிச்சயமாக: தயவுசெய்து எமக்கு உங்கள் கேள்வி, கருத்துக்களை எழுதி அனுப்புங்கள்.
ஆலய ஆதியினகர்த்தா.
14.04.2017 ஹேவிளம்பி புதுவருடப்பிறப்பு விசேட பூஜை
எதிர்வரும் 14.04.2017 அன்று ஹேவிளம்பி புதுவருடப்பிறப்பை முன்னிட்டு ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் அம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம் மற்றும் விசேட நவாவரண பூஜையும் அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் துணையோடு நடைபெறவுள்ளது. இந்த விசேட புண்ணிய நாளில் பக்தர்கள் அனைவரும் ஆசார சீலர்களாக வருகை தந்து அம்பாளின் அருளால் ஜாதக மற்றும் கிரக தோஷங்கள் நீங்கப் பெற்று சகல வளங்களும் பெற்று பேரானந்த வாழ்வு பெற்று வாழ வாழ்த்தி ஆசீர்வதிக்கிறோம்.
ஆலயகுரு
ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்தில் 13.10.2015 தொடக்கம் 22.10.2015 வரை நவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெற அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாளின் அருள் கிடைக்கப் பெற்றுள்ளது. ,இந்த விசேட நாட்களில் பக்த்தர்கள் அனைவரும் ஆசார சீலர்களாக வருகைதந்து துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களின் அருளை பெற்றுசெல்லும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
22.10.2015 விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு ஏடு தொடக்கும் வைபவம் நடைபெறும்.
சென்ற வருட நவராத்திரிவிழா ஒளி நாடா பார்க்க இங்கே அழுத்தவும்.
நிகழும் ஜய வருஷம் ஆனித்திங்கள் 9ம் நாள் 23.06.2014 திங்கள்கிழமை தொடக்கம் 09.07.2014 புதன்கிழமை வரைக்கும் ஜேர்மன் நாட்டில் ஹம் மாநகரில் வீற்றிருக்கும் காமேஸ்வரரை பதியாக கொண்டுள்ள ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு மகோற்சவம் நடைபெற அம்பாளின் அருளும் குருவின் ஆசியும் கிடைத்துள்ளது.
இவ் விழாக்காலங்களில் அனுதினமும் காலை 7.00 மணிக்கு ஸ்நபன அபிஷேகமும் 10.00 மணியளவில் மூலஸ்தான பூஜையும் 11.00 மணிக்கு கொடிதம்ப பூஜையும் அதனைத் தொடர்ந்து 12.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் நடைபெற்று அம்பாள் உள்வீதி உலா வருவா. மதியம் 1.30 மணியளவில் அடியவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி, திருமடத்தில் அன்னதானமும் வழங்கப்படும்.
மாலை 4.00 மணிக்கு மூலஸ்தான விஷேட பூஜையும் மாலை 5.15 மணியளவில் கொடிதம்ப பூஜையும் மாலை 6.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் காமாக்ஷி அம்பாளுக்கு மந்திர புஷ்பா பாராயணம், வேத பாராயணம், கண பாராயணம், ஸ்தோத்திர பாராயணம், தேவார பாராயணம், இவையனைத்தும் நிகழ்வு பெற்று, சர்வ வாத்திய பிரியையான சர்வாம்பிகை உலகை காக்கும் பொருட்டு மாலை 7.00 மணியளவில் உள்வீதி உலா வருதலுடன் யாக தரிசனமும் நிகழ்வு பெற்று , தொடர்ந்து வெளி வீதிஉலா வருதலும் நிகழ்வுபெற்று, இரவு 8.30 மணியளவில் அடியவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படும். இவ் வேளையில் அனைவரும் ஆசார சீலர்களாக வருகை தந்து அம்பாளை வழிபட்டு அனைத்துச் செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ்வீர்களாக!
இவ்வண்ணம்
ஆலயகுரு
திருவிழா பத்திரிகையை பார்க்க இங்கே அழுத்தவும்....
கும்பாபிசேக மகோற்சவ திகதி விபரங்கள்
27.04.2014 ஞாயிறு கிரிகை ஆரம்பம்
02.05.2014 வெள்ளி யாக ஆரம்பம்
03.05.2014 சனி எண்ணைக்காப்பு
04.05.2014 ஞாயிறு கும்பாபிசேகம்
05.05.2014 திங்கள் மண்டலாபிசேகம் ஆரம்பம்
22.06.2014 ஞாயிறு மண்டலாபிசேக பூர்த்தி
06.07.2014 ஞாயிறு தேர் உற்சவம்
ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய கும்பாபிசேகம் நடைபெற்று 12வது ஆண்டை நெருங்கி கொண்டிருகிறது 07.07.2002ஆம் ஆண்டு கும்பாபிசேகம் செய்யபட்டது நீங்கள் அனைவரும் அறிந்ததே. ஆகம விதிமுறைகளின் படி 12 வருடங்களுக்கு ஒரு முறை மீள் கும்பாபிசேகம் செய்யப்பட வேண்டும். அதன் படி 2013ஆம் ஆண்டு உற்சவம் முடிந்தவுடன் தொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்டு ஒரு வருட காலத்துக்குள் சில சீர்திருத்த வேலைகள் நிறைவு செய்யப்பட்டு 2014ஆம் ஆண்டு முற்பகுதியில் கும்பாபிசேகம் செய்ய தீர்மானித்துள்ளோம். பக்தர்கள் அனைவரும் கும்பாபிசேக விழாவிலும், மண்டலாபிசேக விழாக்களிலும், மேலும் நடைபெற இருக்கும் திருப்பணிகளிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆலயத்தில் சில முக்கிய திருப்பணிகள் செய்யவேண்டி இருகின்றன. ஆலய தெற்குவாசல், வடக்குவாசல், மேற்க்குவாசல் கதவுகள் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. கொடிமரத்தின் மேல் உள்ள நான்கு யன்னல்களும், மற்றும் உள்ளே இருக்கும் சன்னிதானங்களில் சிறு திருத்த வேலைகளுடன், ஒவ்வொரு சன்னிதானங்களின் கதவுகளும் சிற்ப வேலைகளுடன் கூடியதாக புதிதாக போடத் தீர்மானிக்க பட்டுள்ளது.முன் நுழை வாயில் ராஜாகோபுர கதவுகளும் திருத்த வேலைகள் செய்யப்பட வேண்டி உள்ளதுடன் வெளிமதில் சுவர் சிறப்ப வேலைகளும் செய்யவேண்டி உள்ளன.
ராஜாகோபுரம் , ராஜவிமானம் ஆகியவை ஜேர்மன் நாட்டு சீதோஷ நிலைமைகளால் சில உடைவுகளுக்கு உட்பட்டுள்ளன இவை யாவும் கட்டாயம் சீர்திருத்த வேலைகள் செய்யப்பட வேண்டி இருப்பதால் இவை யாவும் செய்வதற்கு சுமார் 250,000.00 யூரோ(இரண்டரை லக்ஷம் ) தேவையென கணக்கிடப்பட்டுள்ளது. வேண்டுவோருக்கு வேண்டும் வரமருளும் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் அடியார்களாகிய நீங்கள் இத் திருபநிகளுக்கு நிதிஉதவி தருவதுடன் ஆலய திருப்பணிகளில் சிலவற்றை நீங்களே பொறுப்பெடுத்து செய்து பணிகளை துரிதமாக நிறைவேற்ற உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் ஆலயத்தில் சிற்ப வேலைகள் செய்வதற்காக தென் இந்தியாவில் இருந்து சிட்பாசிரியர்களை மீண்டும் வரவழைக்க வேண்டிய கட்டாயமும் இருப்பதால் அவர்கள் இங்கு ஆறு மாத காலம் தங்கி சிற்ப வேலைகளை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளன. அடியார்களாகிய உங்களின் ஒத்துழைப்புடனும் எமது விடா முயற்சியாலும் பல சிரமங்களின் மத்தியிலும் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. நாம் அனைவரும் சேர்ந்து அம்பாளின் இந்த புனருத்தாரண கும்பாபிசேகமும் மிக சிறப்பாக நடைபெற அன்னைக்கு திருப்பணிகள் செய்வோமாக!
ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் (நோற்ரையின் வெஸற்பாலன்) ஹம் நகரில் அமைந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு 7ம் மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற இவ் ஆலயம் ஐரோப்பிய நாடுகளில் ஆகம விதி நெறிப்படி அமைக்கப்பட் ராஜகோபுரத்துடன் மற்றும் விமாணத்துடன் கூடிய பெரிய ஆலயமாகும்.
தினம்தோறும் மூன்றுகாலப் பூசைகள் நடைபெற்று வரும் காமாட்சி அம்பாள் ஆலயத்தில், வருடாந்த மஹோற்சவ காலத்தில் அன்னை காமாட்சி அம்பாள் ரதத்தில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் மழை பொழியும் பொருட்டு வீதியுலா வரும் வேளையில் சுமார் 25.000க்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து அன்னையின் அருளெனும் மழையில் நனைகின்றனர். இவர்களில் 20.000 மேற்பட்டவர்கள் வெளிநாடுகளிலிருந்து அன்னையின் உற்சவத்தை கண்டுகழிப்பதற்காக வருகை தந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கிட்டத்தட்ட 1,5 தொடக்கம் 1,7 மில்லியன் யூரோவை பக்தர்களின் நன்கொடை, வங்கி கடன் உதவி இவற்றின் மூலமாகப் பெற்று, ஹம் நகரில் வசிக்கும் கட்டிடநிபுணர் திரு. ஹயின்ஸ் ரைனர் ஹைஸ்கோஸ்ற் என்பவரின் கட்டிட கட்டுமானப் பணியுடனும், இந்திய சிற்பக் கலைஞர்களின் சிற்பச் சிறப்பாற்றலுடனும் சுமார் (27*27) 729 மீற்றர் சதுரப்பரப்பில் ஆலயம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.
அன்னை காமாக்ஷி அம்பாள் தன்னை நாடி வரும் அடியார்களை தன் அன்புப்பார்வையால் அருள்கோடி அள்ளி வழங்குகிறாள். காமாட்சி எனும் சமஸ்கிருத சொல்லின் பொருள்- அன்புடன் பார்க்கும் கண் என்பதாகும். அன்னையானவள் தன் குழந்தையை எப்படி பார்ப்பாளோ அதே போல அண்டசராசரங்களையும் படைத்து, காத்து, ரட்சித்து வரும் அன்னை காமாட்சியும் தன் குழந்தைகளான எம்மை தனது அன்புப் பார்வையால் முத்திப் பாதைக்கு இட்டுச் செல்கிறாள்.
அன்னையின் அருள்பெற உங்கள் அனைவரையும் காமாட்சி அம்பாள் ஆலயம் அன்புடன் வரவேற்கிறது!